மலாய்க்காரர்களை ஒன்றிணைப்பதில் ஆட்சியாளர்கள் முக்கியப் பங்காற்ற முடியும்

கோலாலம்பூர், மே.05-

மலேசியாவில் மலாய்க்காரர்களின் ஆதிக்கத்தை வலுப்படுத்த அனைத்து மலாய் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். மலாய்க்காரர்களை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைப்பதில் ஆட்சியாளர்கள் உதவ வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் கேட்டுக் கொண்டுள்ளார்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மலாய்க்காரர்களை ஒன்றிணைப்பதில் திறன் பெற்றுள்ள மலாய் ஆட்சியாளர்களின் கடந்த காலச் சாதனைகளையும், வரலாற்றையும் சுட்டிக் காட்டிய ஹம்ஸா ஸைனுடின், 80 ஆண்டுகளுக்கு முன்பு மலாயன் யூனியன் உருவாவதற்கு எதிரான எதிர்ப்பைக் குறிப்பிட்டார்.

1946 ஆம் ஆண்டு மலாயன் யூனியனுக்கு எதிராக எதிர்ப்பை பின்னோக்கி பாருங்கள். கிளந்தான், ஜோகூர், கெடா மற்றும் தீபகற்ப மலேசியாவில் உள்ள மலாய்க்காரர்கள் எவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டார்கள், எவ்வாறு அம்னோ நிறுவப்பட்டது, ஆட்சியாளர்களின் பங்களிப்பு என்ன என்பது விளங்கிடும் என்று ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS