நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார். அதனை அடுத்து திரையுலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகின் பல ஆண்டுகளாக நகைச்சுவை நடிகராகவும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் கவுண்டமணி. தற்போது வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் நடிக்காமல் உள்ளார். இருப்பினும் ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்று அவர் நடித்த திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 67.

WATCH OUR LATEST NEWS