இரண்டு பூர்வகுடி சகோதர்கள் பிணமாகக் கிடந்தனர்

கோல கிராய், மே.05-

கடந்த சனிக்கிழமை காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட இரண்டு பூர்வகுடி சகோதர்கள், பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளந்தான், கோல கிராய், கம்போங் கிலாட் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் 16 மற்றும் 17 வயதுடைய அவ்விரு சகோதர்களின் உடல்களும் இன்று காலையில் மீட்கப்பட்டதாக சுங்கை டுரியான் தீயணைப்பு நிலையத் தலைவர் ஸுல்ஹில்மி பஹாருடின் தெரிவித்தார்.

ஒருவரின் உடல் காலை 8.50 மணியளவில் மாச்சாங், பாலோ ராவாவிலும், மற்றொருவரின் உடல் காலை 10 மணிக்கு தானா மேரா, புக்கிட் பானாவிலும் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS