கங்கார், மே.05-
வாகனத்தை நிறுத்துவதற்கானத் தானியங்கி கட்டண முறை இயந்திரத் தடுப்பை மோதித் தள்ளி, சேதம் விளைவித்ததாக நம்பப்படும் பிகாப் ரக வாகன ஓட்டுநரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
3 தானியங்கி தடுப்பைக் கண்மூடித்தமான மோதி சேதம் விளைவித்த நபர் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த நபர் தேடப்பட்டு வருகிறார்.
கங்கார், ஜாலான் மார்கெட்டில் உள்ள ஜாலான் செருலிங்கில் இன்று காலை 11 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.