மனைவியை ரப்பர் குழாயினால் அடித்ததாக நபர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே.05-

தனது மனைவியைக் காலால் எட்டி உதைத்து, ரப்பர் குழாயினால் அடித்துக் காயம் விளைவித்ததாக நபர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

35 வயதுடைய டேனியல் கென்னத் அப்துல்லா என்ற அந்த நபர், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 9 மணியளவில் கோலாலம்பூர், பண்டார் பெர்மாய்சூரியில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் 24 வயதுடைய தனது மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS