சிங்கப்பூர், மே.05-
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சிங்கப்பூர் 14 ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அந்நாட்டின் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வார் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் அதற்கான ஊழியர்களும் வளங்களும் அவருக்கு வழங்கப்படும் என்றார் வோங். இது குறித்து பிரித்தம் சிங்கிடம் தாம் பேசிவிட்டதாக வோங் கூறினார். சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி வலிமை மிக்க வேட்பாளர்களைக் களமிறக்கி, கடும் போட்டியைக் கொடுத்ததாக பிரதமர் வோங் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் மொத்தம் 206 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அவர்களில் 32 பேர் இந்தியர்கள். அவர்களில் ஒன்பது பேர் நாடாளுமன்றம் செல்கின்றனர்.
பாட்டாளிக் கட்சியின் சார்பில், பிரித்தம் சிங் உள்பட மூன்று இந்திய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அவர்களில் பிரித்தம் சிங் மட்டும் நாடாளுமன்றம் செல்கிறார்.