புத்ராஜெயா, மே.05-
புலன் விசாரணை தொடர்பில் புத்ராஜெயா எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குடும்ப மாது பமேலா லிங், முக்கியத்க் தகவலைக் கொண்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அந்தத் தகவலை பமேலா லிங் வெளியிடுவாரோயால் தங்களின் பாதுகாப்புக்கு மிரட்டலாக அமையலாம் என்ற அச்சத்தின் காரணமாக 42 வயதுடைய அந்தப் பெண்மணி குறிப்பிட்ட கும்பலால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என்று அந்தப் பெண்மணியின் குடும்பத்தினர் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் சங்கீட் கவுர் டியோ தெரிவித்துள்ளார்.
சட்ட விரோதப் பணம் மாற்றம் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பமேலா லிங் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தனியொரு நபராக இ-ஹெய்லிங் வாகனத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.