அலோர் காஜா, மே.05-
அண்டை நாட்டிற்கு மிகப் பெரிய அளவில் திரவப் போதைப் பொருள் கடத்தப்படுவதை மலேசிய கடல் சார் அமலாக்க ஏஜென்சி வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
உளவுத்துறையிடமிருந்து கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து கடந்த வாரம் வியாழக்கிழமை மலாக்கா, அலோர் காஜா, பெங்காலான் பாலாக் கடற்பகுதியில் அமலாக்க அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.
மொத்தம் 179 போத்தல்களில் ஒரு கோடியே 50 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள அந்த போதைப்பொருள், பறிமுதல் செய்யப்பட்டதாக மலாக்கா, அலோர் காஜாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் துணை தலைமை இயக்குநர் லக்சாமானா மூடா மரிதிம் முகமட் ஸாவாவி அப்துல்லா தெரிவித்தார்.