கோலாலம்பூர், மே.05-
நீண்ட நாள் விடுமுறையில் இருந்து வந்த பொருளாதார அமைச்சரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ ரபிஃஸி ரம்பி, மீண்டும் கட்சிப் பணிக்குத் திரும்பினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை புத்ராஜெயா, ஶ்ரீ பெர்டானாவில் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் மத்தியச் செயலவைக் கூட்டத்தில் ரபிஃஸி ரம்லி கலந்து கொண்டார்.
கட்சியின் மத்தியச் செயலவைக் கூட்டத்தில் ரபிஃஸி ரம்லி கலந்து கொண்டதைப் பிரதமரும், பிகேஆர் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்பசுத்தினார்.
கடந்த மாதம் நடைபெற்ற கட்சியின் தொகுதித் தேர்தல் முடிவுகள் குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.