இந்தியப் பிரஜை மீது நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே.05-

தாம் பணியாற்றிய நிறுவனத்திற்குச் சொந்தமான பணத்தை நம்பிக்கை மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் ஓர் இயக்குநரான ஓர் இந்தியப் பிரஜை, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

57 வயது ராஜேந்தர் சிங் என்ற அந்த இயக்குநர் தாம் பணியாற்றிய வந்தேஜ் டிரேடிங் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 486 ரிங்கிட் 12 காசை நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் கோலாலம்பூர், ஜாலான் பிஞ்சாய், இல்ஹாம் டவரில் உள்ள தாம் பணியாற்றிய நிறுவனத்தில் ராஜேந்தர் சிங், இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் ராஜேந்தர் சிங் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS