அமெரிக்கா-சீனா வர்த்தக நெருக்கடியைச் சமாளிக்க எதிர்க்கட்சிகள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும்

கோலாலம்பூர், மே.05-

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக நெருக்கடியைச் சமாளிப்பதில் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சியினருக்கு வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வரி விதிப்பு, நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பேரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டு உலக வல்லரசுகளுக்கு இடையிலான வர்த்தக பதட்டங்களால் எழும் சவால்களுக்கு அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு விரிவான அணுகுமுறை தேவை என்று ங்கா கோர் மிங் வலியுறுத்தினார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக நெருக்கடியிலிருந்து எழும் சவால்களுக்கு, முன்முயற்சியுடன் உள்ளடக்கிய ‘முழுமையான தேச’ அணுகுமுறை தேவைப்படுகிறது. இது சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் கூட்டாக பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பாகும் என்று ங்கா கோர் மிங் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அதே வேளையில் மலேசியாவிற்கு எதிராக அமெரிக்காவின் பரஸ்பர இறக்குமதி வரிகள் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத் தொடரில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்த நடவடிக்கைகளையும் ங்கா கோர் மிங் வரவேற்றார்.

WATCH OUR LATEST NEWS