14 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 10 பேர் காயம்

புக்கிட் மெர்தாஜாம், மே.05-

பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் இன்று திங்கட்கிழமை 14 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பத்து பேர் காயமுற்றனர்.

இவ்விபத்து பட்டர்வொர்த் – கூலிம் நெடுஞ்சாலையில் 11 ஆவது கிலோ மீட்டரில் காலை 7.10 மணியளவில் நிகழ்ந்தது. பட்டவொர்த்தை நோக்கி நடந்த இந்த விபத்தில் ஹோண்டா சிட்டி கார், திடீரென்று பிரேக் போட்டு, நிறுத்தப்பட்டதால் அவ்வழியே வந்த இதர வாகனங்கள் ஒன்று மற்றொன்றுடன் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகளும் கடும் காயங்களுக்கு ஆளானதாக செபராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS