புத்ராஜெயா, மே.06-
குடிநுழைவு அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தி விபச்சாரம் உட்பட பல்வேறு ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் அந்நிய நாட்டுப் பெண்களுக்கு எதிராக குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் உள்ளூரைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் உட்பட 16 கைது செய்யப்பட்டனர்.
கோலாலம்பூர், பண்டான் பெர்டானா மற்றும் சிலாங்கூர் ஶ்ரீ கெம்பாஙானில் மேற்கொள்ளப்பட்ட இரு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் 19 க்கும் 61 க்கும் இடைப்பட்ட வயதுடைய 16 பேர் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை துணை தலைமை இயக்குநர் இஸ்மாயில் மொக்தார் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களின் விளம்பரப்படுத்துவது மூலம் வாடிக்கையாளர்களை அணுகும் இக்கும்பல், பயன்படுத்திய செயலியை அடிப்படையாகக் கொண்டு இவ்விரு சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.