கோலாலம்பூர், மே.06-
கோழி முட்டை விலை, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு 3 காசு விலை உயரலாம் என்று மலேசிய பண்ணையாளர் சங்கங்களின் சம்மேளனம் கோடி காட்டியுள்ளது.
கோழி முட்டை விலை, சீராக இருப்பதை உறுதிச் செய்வதற்கு அரசாங்கம் வழங்கி வரும் உதவித் தொகை, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி நிறுத்தப்படவிருக்கிறது.
இந்நிலையில் கோழி முட்டைக்கான தற்போதைய உற்பத்தி செலவினம் 38 காசு தொடந்து நிலை நிறுத்தப்படுமானால் முட்டை விலை 3 காசு உயரும் என்று அந்த சம்மேளனத்தின் துணைத் தலைவர் லீ யூன் யெயாவ் தெரிவித்தார்.
நாடு முழுவதும் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் நாள் ஒன்றுக்கு சராசரி 33 மில்லியன் முதல் 35 மில்லியன் வரை கோழி முட்டைகளை விநியோகித்து வருகின்றனர்.
மே முதல் தேதியிலிருந்து ஜுலை 31 ஆம் தேதி வரை அரசாங்கம் வழங்கி வரும் ஒரு முட்டைக்கு, 5 காசு விகித உதவித் தொகையை இழக்க நேரிட்டால் முட்டைக்கு சரசாரி 3 காசு வீதம் உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று அவர் குறிப்பிட்டார்.