புத்ராஜெயா, மே.06-
தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள், மருந்துப் பொருட்களின் விலைப் பட்டியலை பொது மக்களின் காட்சிக்கு வைக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையை எதிர்த்து தனியார் துறையைச் சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், இன்று காலையில் புத்ராஜெயாவில் ஆட்சேப மறியலில் குதித்தனர்.
கடந்த மே 1 ஆம் தேதி முதல் நடப்புக்கு வந்துள்ள புதிய விதிமுறையை தாங்கள் முழு வீச்சில் எதிர்ப்பதாக சூளுரைத்த அவர்கள், பல்வேறு சுலோங்களைத் தாங்கிய அட்டைகள் மற்றம் பதாகைகளை ஏந்திய வண்ணம் பிரதமர் அலுவலகத்தின் முன் திரண்டனர்.
சுகாதார அமைச்சு மற்றும் உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சினால் கொண்டு வரப்பட்ட இந்த புதிய விதிமுறையை தாங்கள் அமல்படுத்த இயலாது என்றும், / அதனை ஒருமித்தக் கருத்துடன் எதிர்ப்பதாகவும் , மருத்துவர்கள் கறுப்பு நிற ஆடையை அணிந்த நிலையில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
2025 ஆம் ஆண்டு மருந்து கட்டுப்பாட்டுச் சட்டம் தங்களுக்கு எதிரானது என்று அவர்கள் வர்ணித்தனர். இது தொடர்பாக தங்கள் ஆட்சேபத்தைத் தெரிவிக்கும் வகையில் கோரிக்கை மனு ஒன்றைத் தாக்கல் செய்வதற்கு அவர்கள் ஒன்று திரண்டு, சுமார் 500 மீட்டர் தூரம் உள்ள சுகாதார அமைச்சுக்கு அணிவகுத்து செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
தனியார் கிளினிக்குகளிலும், மருத்துவமனைகளிலும் விற்கப்படும் ஒரே வகையான மருந்தின் விலை , கிளினிக்கிற்கு கிளினிக் / மற்றும் மருத்துவமனைக்கு மருத்துவமனை / மாறுப்பட்டு இருப்பது ஏன் என்பது குறித்து மருத்துவர் சங்கம் உட்பட தனியார் மருத்துவர்கள் இதுவரை விளக்கம் அளிக்காதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது..
தனியார் கிளினிக்குகளும், மருத்துவமனைகளும் சிகிச்சைக்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதற்கு காரணம், மருந்து விலை உயர்த்து விட்டதாக அவர்கள் காரணம் கூறுகின்றனர்.
அப்படியொன்றால், மருந்துகளின் விலைகளை பொது மக்களின் முன்னிலையில் காட்சிக்கு வைக்குமாறு மருத்துவர்களை நிர்பந்திக்கும் புதிய சட்ட விதியை அரசாங்கம் கடந்த மே முதல் தேதி அமல் படுத்தியுள்ளது.
அந்த அமலாக்கத்தை கடுமையாக எதிர்க்கும் தனியார் மருத்துவர்கள்,/ மருந்து விலைகளை காட்சிக்கு வைக்க முடியாது என்று கூறி, இன்று அமைதி ஆட்சேப மறியலில் இறங்கியுள்ளனர்.