மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் . இப்படத்தில் விக்ரம், ரவி மோகன், கார்த்தி, திரிஷா,ஐஷ்வர்யா ராய் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற வீர ராஜ வீர பாடலின் மீது காப்புரிமை வழக்கு தொடுக்கப்பட்டது. பாடகரான ஃபையாஸ் வசிஃபுதின் டகர் கடந்த 2023 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார். ஏனெனில் இப்பாடல் அவர் தந்தை ஃபையாசுதின் டகர் மற்றும் மாமா ஸாஹிருதின் டகர் இசையமைத்த சிவ துதி பாடலில் இருந்து இப்பாடல் இசையமைப்பட்டுள்ளதாக வழக்கைத் தொடுத்தார். இந்நிலையில் இந்த வழக்கிற்கு சில வாரங்களுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
படத்தின் தயாரிப்பாளர் ஜூனியர் டகர் பிரதர்சுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் கொடுக்க மற்றும் படத்தில் இவர்களுக்கு கிரெடிட் கொடுக்குமாறு தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஏ.ஆர். ரஹ்மான் தாக்கல் செய்த மேல் முறியீட்டு மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் அவர் ரூபாய்.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவு அளித்துள்ளது.