கோலாலம்பூர், மே.06-
நிதி மற்றும் நிர்வாகத்தில் திறமையானவர்கள் மட்டுமே நாட்டின் கால்பந்து அணிகளை நிர்வகிக்க முடியும். அவர்களுக்கு மட்டுமே அப்பொறுப்பைக் கொடுக்க இயலும் என இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார். உள்நாட்டு கால்பந்து வீரர்களின் நலனை இது உறுதிச் செய்யும் என அவர் வலியுறுத்தினார்.
சில அணிகள் வருமானப் பிரச்னை மற்றும் விளையாட்டாளர்களின் நலன் ஆகிய அடிப்படை விவகாரங்களை நன்கு நிர்வகிக்கத் தவறியிருப்பதை அமைச்சர் ஒப்புக் கொண்டார். அத்தகையச் சூழ்நிலைகள் உள்நாட்டு விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவு கொடுக்கும் நிறுவனங்களை ஈர்க்கும் முயற்சிகளைப் பாதிக்கும் என்றாரவர்.
கால்பந்து அணிகளைச் சீராக நிர்வகிக்க முறையான சூழல் தேவை என ஹான்னா இயோ வலியுறுத்தினார்.