ஆமதாபாத், மே.06-
குஜராத்தின் பல பகுதிகளில் மழை, பலத்த காற்று, மின்னல் மற்றும் புழுதிப் புயல் காரணமாக , 14 பேர் உயிரிழந்தனர். இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த சில நாட்களுக்கு குஜராத் மாநிலம் முழுவதும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கணித்துள்ளது. ஏற்கனவே பலத்த காற்றுடன் பல பகுதிகளில் மழை பெய்தது.
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் உள்ள 168 இடங்களில் பருவம் தவறிய மழை பெய்துள்ளது. ஆமதாபாத், ஆனந்த், கேடா, தஹோத், ஆரவல்லி மற்றும் வதோதரா மாவட்டங்களில் மின்னல், மின்சாரம் பாய்தல், மரங்கள், வீடுகள் மற்றும் விளம்பர பலகைகள் இடிந்து விழுந்தது போன்ற மழை தொடர்பான சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். ஆமதாபாத்தின் விராம்காமில் மின்னல் தாக்கி ஒருவர் பலியானார்.