ஷா ஆலாம், மே.06-
கடந்த மாதம் ஷா ஆலாமில் ஒரு வங்கியின் முன்புறம் சக பிச்சைக்காரரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக ஆடவர் ஒருவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
பிச்சை எடுப்பதில் ஏற்பட்டுள்ள எல்லைத் தகராற்றில் சக பிச்சைக்காரரான 40 வயது R. அர்ஜுனன் என்பவரை கத்தியால் கத்தி கொலை செய்ததாக ஒரு மாற்றுத் திறனாளியான 28 வயது முகமட் பௌஃஸான் அடிப் அப்துல் அஸிஸ் என்பவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த மாற்றுத் திறனாளி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் ஷா ஆலாம், செக்ஷன் 18 இல் ஒரு வங்கியின் முன் அந்த மாற்றுத் திறனாளி இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.