இஸ்கண்டார் புத்ரி, மே.06-
பள்ளி வேனுக்குள் மூச்சடைத்து உயிரிழந்த 5 வயது சிறுவன் மரணம் தொடர்பில் வேன் ஓட்டுநர், புதன்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் எம். குமரேசன் தெரிவித்தார்.
கடந்த வாரம், இஸ்கண்டார் புத்ரி, தாமான் புக்கிட் இண்டாவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் 56 வயதுடைய அந்த வேன் ஓட்டுநர், பத்து பஹாட், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றஞ்சாட்டப்படுவார் என்று குமரேசன் குறிப்பிட்டார்.
காலையில் பாலர் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய 5 வயது சிறுவன், வேனுக்குள்ளேயே உறங்கியிருக்கலாம் எ ன்று நம்பப்படும் நிலையில், அந்தச் சிறுவனை பாலர் பள்ளியில் சேர்க்கப்படாமல், வீட்டிற்கு திரும்பி விட்ட அந்த வேன் ஓட்டுநர், வேன் கதவைப் பூட்டிவிட்டதாக நம்பப்படுகிறது.
மதியம் 12 மணியளவில் அந்த ஓட்டுநர் வேனின் கதவைத் திறந்த போது, சிறுவன் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி இறந்த நிலையில் கட்டுப்பிடிக்கப்பட்டது அந்த வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.