விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் காயம்

கோலாலம்பூர், மே.07-

கோலாலம்பூர் இலிட் சாலையை இணைக்கும் லெபுராயா உத்தாரா செலாத்தான் நெடுஞ்சாலையின் 9.9 ஆவது கிலோ மீட்டரில் இன்று அதிகாலை நிகழ்ந்த இரு லோரிகள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் கடுமையாகக் காயமுற்றனர்.

இந்த விபத்து அதிகாலை 5.48 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் நிகழ்ந்ததாக தீயணைப்பு, மீட்புப் படையின் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க லோரி ஓட்டுநர், கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS