மலாக்கா, மே.07-
இரண்டு மாதக் கைக்குழந்தை ஒன்று சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பில் கணவரும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 வயது மதிக்கத்தக்க அந்த தம்பதியர், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலாக்கா, அலோர் காஜா, சுங்கை பெத்தாயைச் சேர்ந்த அந்த தம்பதியர், 2 வயது குழந்தைக்கு உடலில் கடும் காயங்கள் ஏற்படும் அளவிற்கு அதனைச் சித்ரவதை செய்து வந்ததாக நம்பப்படுகிறது.
இன்று காலையில் மலாக்கா, செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த தம்பதியரை விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்குத் தடுத்து வைக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.