இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று தொடங்கியது

புத்ராஜெயா, மே.07-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான விசாரணை, இன்று புதன்கிழமை மீண்டும் தொடங்கியது.

புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு நாட்டின் ஒன்பதாவது பிரதமரான 65 வயது இஸ்மாயில் சப்ரி காலை 10.54 மணியவில் வந்தடைந்தார்.

தனது முக்கிய அதிகாரி ஒருவரின் வீட்டில் 17 கோடியே 70 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது தொடர்பில் இஸ்மாயில் சப்ரி, ஒரு சந்தேக நபராக எஸ்பிஆர்எம்மால் வகைப்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று தொங்கிய இரண்டாம் கட்ட விசாரணை, இஸ்மாயில் சப்ரியின் சொத்துக்கள் சம்பந்தப்பட்டதாகும்.

WATCH OUR LATEST NEWS