மோட்டார் சைக்கிளோட்டிக்கு மரணம் விளைவித்ததாக வேன் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

கடந்த வாரம் சனிக்கிழமை சிரம்பான், ஜாலான் பெர்சியாரான் செனாவாங்கில் வேன் ஒன்று , சிவப்பு நிற சமிக்ஞை விளக்கையும் பொருட்படுத்தாமல், மோட்டார் சைக்கிளோட்டியை மோதி மரணம் விளைவித்ததாக வேன் ஓட்டுநர், சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

இந்த விபத்து தொடர்பான காணொளி , அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இந்த விபத்துக்கு காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் 45 வயதுடைய வேன் ஓட்டுநர் P. மோகன் என்பவர் மாஜிஸ்திரேட் நுருல் பாஃர்ஹா சுலைமான் முன்னிலையில் நிறுத்துப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஒரு மோட்டார் சைக்கிளோட்டியான 21 வயது முகமட் அனாஸ் இஸ்கண்டார் என்பவருக்கு மரணம் விளைவித்ததாக மோகனுக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மே 3 ஆம் தேதி இரவு 11.59 மணியளவில் சிரம்பான், பெர்சியாரான் செனாவாங் 1 இல் மோகன் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10ஆ ண்டு சிறை மற்றும் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் மோகன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS