மாமனாரை அடித்துக் கொன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

சிரம்பான், மே.07-

தனது மாமனாரை அடித்துக் கொன்றதாக 32 வயது இந்திய ஆடவர் ஒருவர் சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

வி. கார்த்தி என்ற அந்த நபர், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹாஸீலியா முகமட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

ஒரு தொழிற்சாலை ஊழியரான கார்த்தி, 52 வயதுடைய தனது மாமனார் P. சசிகுமார் என்பவரை நெஞ்சுப் பகுதியிலேயே பலவந்தமாகக் குத்தி, மரணத்தை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி பிற்பகல் 2.30மணியளவில் சிரம்பான், தாமான் ராஹாங்கில் உள்ள ஒரு வீட்டில் கார்த்தி இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் கொலைக் குற்றத்திற்கான குற்றவியல் சட்டமான 302 பிரிவின் கீழ் அந்த தொழிற்சாலை ஊழியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அந்த நபரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

WATCH OUR LATEST NEWS