இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் – விமானச் சேவையை ரத்து செய்தது மலேசிய ஏர்லைன்ஸ் மற்றும் பாதிக் ஏர்

கோலாலம்பூர், மே.07-

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அவ்விரு நாடுகளுக்கான குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு மலேசியா ஏர்லைன்சும் பாதிக் ஏர் விமான நிறுவனமும் தங்களது விமானச் சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.

இந்தியா, அம்ரிட்சார் வழித்தடத்திற்கான விமானச் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மலேசியா ஏர்லைன்ஸ் இன்று அறிவித்துள்ளது.

இன்று மே 7 ஆம் தேதி முதல் மே 9 ஆம் தேதி வரை அம்ரிட்சார் விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து அந்த வழித்தடத்திற்கான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மலோசியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதே போன்று பாகிஸ்தான் லாஹூர் மற்றும் இந்தியா அம்ரிட்சார் ஆகிய வழித்தடங்களுக்கான தனது விமானச் சேவையைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக பாதிக் ஏர் அறிவித்துள்ளது.

இவ்விரு வழித் தடங்களுக்கான விமானச் சேவைகள் வழக்க நிலைமைக்குத் திரும்பும் வரையில் இரு நாடுகளின் நடப்பு பதற்ற நிலை, அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வரும் என்று அவ்விரு விமான நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

WATCH OUR LATEST NEWS