இந்தியாவின் அதிரடித் தாக்குதல் – பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரைமட்டம்

புதுடெல்லி, மே.07-

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா இன்று மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் இந்தியாவிற்கு எதிராக சதி வேலை செய்தவன் என்று குற்றஞ்சாட்டப்படும் பயங்கவராதி மசூத் அசார் வீடு தரைமட்டமானது. அந்த வீட்டில் இருந்த பத்து பேர் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர், பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா இன்று அதிகாலையில் நடத்திய அதிரடி நடவடிக்கையில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் /ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் நடத்திய தாக்குலில் பயங்கரவாதிகளின் முகாம்கள் தரை மட்டமாகின.

இந்நிலையில் பரபரப்பான சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. முப்படை தளபதிகள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய வீடியோவை இந்திய ராணுவம் இன்று பிற்பகலில் வெளியிட்டுள்ளது.

நாங்கள் சாதாரண குடிமக்களைத் தாக்கவில்லை. மாறாக, பயங்கரவாதிகளின் அரணாக விளங்கும் முகாம்களை நோக்கியே எங்களின் ஒவ்வொரு தாக்குத்கல் அமைந்தது என்று இந்தியா தனது நிலைப்பாட்டை தற்காத்துள்ளது.

WATCH OUR LATEST NEWS