சூர்யா-கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் இணைகிறார்களா?

கோலிவுட்டில் வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்டு வெற்றிகரமாகப் படங்கள் இயக்கி கலக்கிக் கொண்டிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ்.

இவர் நடிகர் சூர்யாவை வைத்து ரெட்ரோ என்ற படம் இயக்கினார். இப்படம் கடந்த மே 1ம் தேதி வெளியாகி பெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெளியாகி 6 நாள் முடிவில் படம் இதுவரை மொத்தமாக ரூ. 86 கோடி வரை வசூல் செய்துள்ளது. 

படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளதால் கண்டிப்பாக வசூலில் படம் மிகப் பெரிய சாதனையைச் செய்யும் என கூறப்படுகிறது.

ஒரு படம் ஹிட்டானாலே அந்த படத்தில் நடித்த ஜோடியோ அல்லது இயக்குனர் நாயகன் கூட்டணியோ மீண்டும் அமைய வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுவார்கள். 

அப்படி தற்போது என்ன தகவல் என்றால் மீண்டும் ரெட்ரோ பட கூட்டணி அமைய இருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். சூர்யா சாருக்காக தயாராக இருக்கும் கதை எனது கனவுப் படம், அதற்கு பெரிய பட்ஜெட் தேவை என அவர் கூறியுள்ளாராம். 

WATCH OUR LATEST NEWS