ஜெயிலர் 2 படத்திற்காக இயக்குநர் நெல்சன் சந்தித்துள்ள பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 

மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர். 

இப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்ததால் ஜெயிலர் படத்தின் 2 – ம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார் நெல்சன். 

தற்போது, இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை போலவே நடிகர் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் மோகன்லாலை இயக்குநர் நெல்சன் நேரில் சந்தித்து படப்பிடிப்பு தொடர்பான விஷயங்களைப் பேசியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.     

WATCH OUR LATEST NEWS