பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

சிரம்பான், மே.07-

11 வயது மாணவனைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஆசிரியர் ஒருவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

37 வயது அப்துல் ஹாலிம் இஸ்மாயில் என்ற அந்த ஆசிரியர் இன்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஹாஸீலியா முகமட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுன் 28, 29 ஆகிய தேதிகளில் போர்ட்டிக்சனில் உள்ள ஒரு ஹோட்டலில் 11 வயது மாணவனைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த ஆசிரியர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS