புதுடெல்லி, மே.07-
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இந்தியாவிற்கான முக்கியத்துவம் இல்லாத அனைத்துப் பயணங்களையும் ஒத்தி வைக்கும்படி மலேசியர்களுக்கு இன்றிரவு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா இன்று அதிகாலையில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தனது வான் போக்குவரத்துப் பாதையை அடுத்த 48 மணி நேரத்திற்கு பாகிஸ்தான் மூடியுள்ளது.
இந்நிலையில் போர் பதற்றம் கடுமையாகி வரும் வேளையில் இந்தியாவிற்கு முக்கியத்துவம் இல்லாத பயணங்களை உடனடியாக ஒத்தி வைக்குமாறு மலேசியர்களுக்கு புதுடில்லியில் உள்ள மலேசியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆகக் கடைசியாகக் கிடைக்கப் பெற்ற நிலவரங்களின்படி இரு நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலை உச்சக்கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் மலேசியர்கள் தங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தியப் பயணங்களை குறிப்பாக பாகிஸ்தான் எல்லைப் பகுதியையொட்டிய இந்திய மாநிலங்களுக்கான அனைத்துப் பயணங்களையும் ஒத்தி வைக்குமாறு மலேசியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
புதுடில்லியில் உள்ள மலேசியத் தூதரகம் தனது X தளத்தில் இன்றிரவு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.