செம்பனைத் தோட்டத்திற்குள் மனித மண்டை ஓடு கண்டுபிடிப்பு

ஈப்போ, மே.08-

செம்பனைத் தோட்டம் ஒன்றில் மனித மண்டை ஓடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரா, சிலிம் ரிவேர், ஜாலான் கோல சிலிம், லாடாங் புக்கிட் பெசோட் என்ற தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த மனித மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டதாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹஸ்னி முகமட் நாசீர் தெரிவித்தார்.

அந்தச் செம்பனைத் தோட்டத்திற்குள் மனித மண்டை ஓடு கிடப்பதாக மாலை 5.13 மணியளவில் கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து போலீஸ் குழு அவ்விடத்திற்கு விரைந்ததாக முகமட் ஹஸ்னி குறிப்பிட்டார்.

பின்னர் K9 பிரிவு மோப்ப நாயின் உதவியுடன் அவ்விடம் அலசி ஆராயப்பட்டதில் ஆங்காங்கு சிதறிக் கிடந்த எலும்புகள் மீட்கப்பட்டன. எனினும் இரண்டு கைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

தடயவியல் சோதனைக்காக அந்த எலும்புக்கூடு, ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக முகமட் ஹஸ்னி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS