தாயாரும், மகளும் படுகாயம்

சுங்கை பூலோ, மே.08-

சுங்கை பூலோ, கத்ரி நெடுஞ்சாலையில், புக்கிட் சுபாங் அருகில் லோரி ஒன்று, காரை மோதியதில் தாயும், மகளும் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் நிகழ்ந்ததாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹாபிஃஸ் முகமட் நோர் தெரிவித்தார்.

வேகக் கட்டுஓஆட்டை இழந்த 31 வயது லோரி ஓட்டுநர், தாயும், மகளும் பயணம் செய்த புரோட்டோன் சாகா பிஎம்எம் காரை மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் 29 வயது மாதுவும், நான்கு வயது மகளும் கடுமையாகக் காயமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS