சிபு, மே.08-
சபா மாநிலத்தில் மிகப் பெரிய நெடுஞ்சாலைத் திட்டமான பான் போர்னியோ சபா நிர்மாணிப்பில் 130 கோடி ரிங்கிட் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழலில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி இன்று வன்மையாக மறுத்தார்.
தனக்கு எதிராக தெலிகிராம் வாயிலாகப் பரப்பட்டுள்ள இந்த லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு, அடிப்படையற்றது என்றும், அவதூறு தன்மையிலானது என்றும் அலெக்சண்டர் நந்தா லிங்கி தெளிவுபடுத்தினார்.
மலேசியாவின் பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் காபிட் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனது நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டு பகிரப்பட்டு வருவதாக அலெக்சண்டர் நந்தா லிங்கி விளக்கினார்.