உள்துறை அமைச்சின் இரண்டு அதிகாரிகள் கைது

புத்ராஜெயா, மே.08-

மலேசிய குடியுரிமை அந்தஸ்தை உறுதிப்படுத்தும் விண்ணப்பத்தை விரைவாக முடித்துக் கொடுப்பதில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் லஞ்ச ஊழல் தொடர்பில் உள்துறை அமைச்சின் இரண்டு அதிகாரிகள் மற்றும் ஒரு தனிநபர் என மூன்று பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

புத்ராஜெயாவில் நேற்று மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரையில் எஸ்பிஆர்எம் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் உள்துறை அமைச்சின் இரண்டு அதிகாரிகளும் அந்த தனிநபரும் கைது செய்யப்பட்டதாக அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அண்மையில் எஸ்பிஆர்எம் தொடங்கிய ஓப் அவுட்லெண்டர் சோதனை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த இரண்டு முக்கிய அதிகாரிகளும், ஒரு தனிநபரும் கைது செய்யப்பட்டதாக அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

எஸ்பிஆர்எம் மேற்கொண்ட இந்த விசாரணைக்கு உள்துறை அமைச்சு முழு ஒத்துழைப்பு நல்கியதாக அந்த ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS