உணவு விநியோகிப்பாளர் போர்வையில் கொள்ளையடித்து வந்தார்

மலாக்கா, மே.08-

தன்னை இ-ஹெய்லிங் உணவு விநியோகிப்பாளர் என்று அடையாளம் கூறிக் கொண்டு, பெண்களை இலக்காக கொண்டுக் கொள்ளையடித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர், இன்று மலாக்கா, ஆயர் கெரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

31 வயது அஹ்மாட் ரீஸ்கான் ஜலிலுடின் என்ற அந்த நபர், 4 பெண்களிடம் தனது கைவரிசையைக் காட்டியுள்ளதாகவும், அந்தக் கொள்ளைகள் சம்பந்தப்பட்ட சில காணொளிகள், சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மலாக்கா தெங்கா மாவட்டத்தில் 26, 27, 49 மற்றும் 70 வயது மதிக்கத்தக்க 4 பெண்களிடம் அந்த நபர் தனது கைவரிசையைக் காட்டியுள்ளதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

பூஃட் பண்டா உணவு விநியோகிப்பாளர் என்ற போர்வையில் அந்நபர், இந்த 4 கொள்ளைகளையும் நடத்தியுள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில ஆயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றப்பதிவில் விவரிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS