21 மலேசியப் பயிற்சியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

தோத்தா திங்கி, மே.08-

இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இராணுவக் கல்லூரிகளில் பயிற்சிப் பெற்று வரும் மலேசிய ராணுவப் படையைச் சேர்ந்த 21 மலேசியர்கள், பாதுகாப்பாக உள்ளனர் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

ராணுவப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்களை உள்ளடக்கிய 21 மலேசிர்களும் தற்போது இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளில் சம்பந்தப்படவில்லை.

அந்த 21 பேரும் தங்களுக்கான இராணுப் பயிற்சியை முடித்துக் கொண்டு இவ்வாண்டில் தாயகம் திரும்புவார்கள் என்று காலிட் நோர்டின் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS