கோலாலம்பூர், மே.08-
புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற ஒரு வர்த்தகப் பெண்மணியான 42 வயது டத்தின் ஶ்ரீ பமேலா லிங் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசாருக்குப் புதிய துப்பு கிடைத்துள்ளது.
இதனைக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் தங்களுக்குக் கிடைத்துள்ள அந்த புதியத் துப்பை அம்பலப்படுத்தப்படுத்த இயலாது. இது முழுக்க முழுக்க பமேலாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டுள்ளது என்று டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.
போலீசார் மேற்கொள்ளும் விசாரணையில் அந்த வர்த்தகப் பெண்மணியின் பாதுகாப்புக்கு எவ்வகையிலும் மிரட்டல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தாங்கள் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டியுள்ளது என்று டத்தோ ருஸ்டி விளக்கினார்.