பெட்டாலிங் ஜெயா, மே.08-
தாம் பணியாற்றி வந்த நிறுவனத்தில் நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஓர் இந்தியப் பிரஜைக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் அனுமதித்தது.
57 வயதுடைய ராஜேந்தர் சிங் என்ற அந்த இந்தியப் பிரஜையை இரு நபர்கள் உத்தரவாதத்துடன் 50 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி அனுமதித்தார்.
வெளிநாட்டவர் என்பதால் ராஜேந்தர் சிங்கிற்கு ஜாமீன் வழங்க கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டதைத் தொடர்ந்து கீழ் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து அந்த இந்தியப் பிரஜை, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
வந்தேஜ் டிரேடிங் நிறுவனத்தின் ஒரு வர்த்தகச் சகாவான ராஜேந்தர் சிங், நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 486 ரிங்கிட்டை நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.