ஷா ஆலாம், மே.08-
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறைக்கப்பட வேண்டும் என்று மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது.
இரு நாடுகளும் சினமூட்டும் நடவடிக்கையிலோ அல்லது இதர தூண்டல்களிலோ ஈடுபட வேண்டாம் என்று மலேசியா வலியுறுத்தியுள்ளது.
எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் முறையான பேச்சு வார்த்தையின் வாயிலாக தீர்வு காண வேண்டும் என்று மலேசியா கேட்டுக் கொண்டுள்ளதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.