பஞ்சாப், மே.08-
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் பஞ்சாபில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
காஷ்மீர், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான்- இந்தியா இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்று அதிகாலையில் இந்தியா தாக்குதல் நடத்தி பாடம் புகட்டி உள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. பஞ்சாபின் Ferozepur -ரில் உள்ள எல்லைப் பகுதி வழியாக இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற ஒரு பாகிஸ்தானியரை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
பாகிஸ்தானைச் சேர்ந்த அந்த நபர் இரவு நேரத்தில், சர்வதேச எல்லையைக் கடந்து ஊடுருவ முயற்சி செய்ததைப் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர். இதையடுத்து, அவர் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த நபர் சுட்டு வீழ்த்தப்பட்டார் என இந்திய பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.