காஜாங், மே.09-
தங்களைப் போலீஸ்காரர்கள் என்று கூறிக் கொண்ட ஐந்து நபர்கள், பணி ஓய்வுப் பெற்ற ஒருவரின் வீட்டில் நுழைந்து பொருட்களைக் கொள்ளையடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் காஜாங், செமினியில் நிகழ்ந்தது என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
சம்பவம் நிகழும் போது 55 வயதுடைய பணி ஓய்வுப் பெற்றவர், தனது மூன்று குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் இருந்துள்ளார்.
ஆயுதமுனையில் அந்த கொள்ளையர்கள் மிரட்டிய போது வீட்டில் இருந்த அனைவரும் பயத்தில் உறைந்துப் போனதாக ஏசிபி நாஸ்ரோ ACP Naazron குறிப்பிட்டார்.
வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமாரவின் பதிவைச் சோதனையிட்ட போது, அடையாளம் தெரியாத அந்த ஐந்து நபர்கள், முகக் கவசம் அணிந்திருந்தனர். இதர இரண்டு நபர்கள் போலீஸ் ஜேக்கெட்டுடன் காணப்பட்டனர்.
இக்கொள்ளைச் சம்பவத்தின் போது, 500 ரிங்கிட் ரொக்கம், விலை உயர்ந்த ஆபரணங்கள், இரண்டு திறன் கைப்பேசிகள் ஆகியவற்றை அக்கும்பல் களவாடிச் சென்றுள்ளது என்று பாதிக்கப்பட்டவர் தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.