விபத்தில் இரண்டு பெண்கள் பலி, இதர நால்வர் காயம்

கூலாய், மே.09-

நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இரண்டு பெண்கள் உயிரழந்தனர். இதர நால்வர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் நேற்று இரவு 10.35 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 34 ஆவது கிலோ மீட்டரில் ஜோகூர், கூலாய்க்கு அருகில் நிகழ்ந்தது.

ஒரு கொள்கலன் லோரி,இரண்டு எம்பிவி வாகனங்கள் மற்றும் ஒரு டொயோட்டா ஹைலக்ஸ் வாகனங்கள் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக கூலாய் தீயணைப்பு, மீட்புப்படை நிலைய செயலாக்க கமாண்டர் முகமட் பிஃர்டாவுஸ் ஜுரித்தா தெரிவித்தார்.

எம்பிவி வாகனமான டொயோட்டா எஸ்திமாவில் பயணித்த இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS