புதிய போப்பாண்டவராக ரோபர்ட் பிரான்சிஸ் பிரேவோஸ்ட் தேர்வு

வத்திகன், மே.09-

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமை மதகுருவாக போப்பாண்டவர் ரோபர்ட் பிரான்சிஸ் பிரேவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்தவரான ரோபர்ட் பிரான்சிஸ் பிரேவோஸ்ட் Robert Franci போப்பாண்டவராக தேர்வு செய்யப்பட்டது மூலம் அந்த உயரிய பொறுப்பை வகிக்கும் முதலாவது அமெரிக்கர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்..

வத்திகன் நகரில் நேற்றிரவு நடைபெற்ற வாக்களிப்பில் ரோபர்ட் பிரான்சிஸ் பிரேவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த வாக்களிப்பில் 71 நாடுகளைச் சேர்ந்த 133 கார்டினல்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்கா, சிகாகோவில் பிறந்தவரான 69 வயது ரோபர்ட் பிரான்சிஸ் பிரேவோஸ்ட், பெரு நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் தமது சமயப் பணியைத் தொடங்கினார்.

போப்பாண்டவராக ரோபர்ட் பிரான்சிஸ் பிரேவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டது மூலம் அவர் போப்பாண்டவர் 14 ஆவது லியோ என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS