புதுடெல்லி, மே.09-
இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானப் பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே இரு வழி தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால், பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவங்களால், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக எல்லையோரங்களில் உள்ள சண்டிகார், ஶ்ரீநகர், ஜைசல்மர், ஷிம்லா, ஜோத்பூர், அம்ரிட்சார் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.