மலாக்கா, மே.09-
கேபல்களைத் திருடும் கும்பலைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் ஓர் இந்திய இளைஞரை மலாக்கா போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த கேபள் திருட்டில் சம்பந்தப்பட்டுள்ள இரு நபர்களில் ஒருவர் பிடிபட்ட வேளையில், மற்றொரு நபரான டினேஸ்வரன் கோவிந்தசாமி தப்பிவிட்டதாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.
25 வயதுடைய அந்த இளைஞரின் ஆகக் கடைசியான முகவரி பேரா, தெலுக் இந்தான் என்பதாகும்.
கெசிக் என்று நண்பர்களால் அழைக்கப்படும் டினேஸ்வரனைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு டத்தோ ஸுல்கைரி முக்தார் கேட்டுக் கொண்டார்.