நிறுவன முகவரை ஏமாற்றியதாக மாது மீது குற்றச்சாட்டு

பட்டர்வொர்த், மே.09-

ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 985 ரிங்கிட் இழப்பு ஏற்படும் அளவிற்கு பசை நாடா விநியோகிப்பாளரை ஏமாற்றியதாக மாது ஒருவர் பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

51 வயது A. புவனேஸ்வரி என்ற அந்த மாது, மாஜிஸ்திரேட் அய்னி அடிலா முகமட் பைஃஸால் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

மூன்று பிள்ளைகளுக்குத் தாயாரான புவனேஸ்வரி, கடந்த ஆண்டு ஜுன் 24 ஆம் தேதி பட்டர்வொர்த், ஜாலான் பாகான் ஜெர்மாலில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 10 ஆண்டு சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் புவனேஸ்வரி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS