கோலாலம்பூர், மே.09-
கிள்ளாள் பள்ளத்தாக்கில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் மனிதக் கடத்தல் துடைத்தொழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் கட்டாயத் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டு, சுரண்டப்பட்டு வந்ததாக நம்பப்படும் 16 வெளிநாட்டுப் பிரஜைகளை மீட்கப்பட்டனர்.
முதல் கட்ட சோதனை நள்ளிரவு 12.05 மணியளவில் ரவாங், பண்டார் தாசேக் புத்ரியில் ஓர் உணவகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 16 க்கும் 17 க்கும் இடைப்பட்ட ஐந்து பையன்கள் மீட்கப்பட்டதாக புக்கிட் அமான் D3 பிரிவின் தலைமை உதவி இயக்குநர் சோஃபியான் சந்தோங் தெரிவித்தார்.
மீட்கப்பட்டவர்களில் நால்வர் மியன்மார் பிரஜைகள் ஆவர். ஒருவர் இந்தோனேசியப் பிரஜையாவார். இதே போன்று அந்த சோதனையில் எஞ்சிய வெளிநாட்டுப் பிரஜைகளும் காப்பாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.