கடந்த சில நாட்களாக இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ’தக்லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் தேதியை மாற்றியுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். நாட்டின் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள அண்மைய சூழ்நிலைகள் மற்றும் உயர்ந்த பாதுகாப்பு நிலையை முன்னிட்டு, மே 16ஆம் தேதி நடைபெறவிருந்த ’தக்லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்கள் துணிச்சலோடு எல்லையில் தங்கள் கடமையைச் செய்து வரும் நிலையில், இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல, மௌன ஒருமைப்பாட்டிற்கான நேரம். புதிய தேதி விரைவில், சூழ்நிலைக்கு ஏற்றவாறு அறிவிக்கப்படும் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.