கோலாலம்பூர், மே.09-
எல்ஆர்டி ரயிலில் பயணம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரை உடலோடு உரசி, மானபங்கம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தனியார் பல்கலைக்கழக மாணவன் ஒருவனுக்கு 5 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
28 வயது ரஹ்மான் மோஷியூர் என்ற அந்த வெளிநாட்டு மாணவன், கடந்த ஜனவரி 9 ஆம் தேதி காலை 9 மணியளவில் கோலாலம்பூர், பங்சாருக்குச் சொல்லும் எல்ஆர்டி ரயிலில் இந்த ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த மாணவன் மாஜிஸ்திரேட் S. மகேஸ்வரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. அந்த தனியார் பல்கலைக்கழக மாணவன், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டான்.